தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல: வைகோ

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கைக்கள் ஏற்புடையதல்ல. இதனால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல: வைகோ

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கைக்கள் ஏற்புடையதல்ல. இதனால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடுகள் ஏற்புடையதல்ல. சட்டப்பேரவையை கூட்டுவது, உரையாற்றுவது, சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவைகளே ஆளுநரின் பணிகள். ஆளுநர் ஆட்சியின்போது மட்டுமே அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.ஆனால், கோவை, நெல்லை தற்போது கன்னியாகுமரியில் ஆளுநர் ஆய்வு செய்வது, துடைப்பத்தை எடுத்துப் பெருக்குவது, குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக்கை எடுத்துப் போடுவது என தமிழகத்தை தூய்மைப்படுத்தப் போகிறேன் என்பன போன்ற செயல்கள் எல்லாம் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக அவர் தமிழக அரசை ஆட்டிப் படைக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுகிறது. 
ஆர்.கே. நகரில் தேர்தல் ஆணையம் எத்தனை குளறுபடிகளை செய்தாலும் சரி, அதிமுகவினர் எத்தனை கோடிகள் செலவழித்தாலும் சரி, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com