திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழுவுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) நடைபெற உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழுவுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) நடைபெற உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சங்க உறுப்பினர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில், சங்கத்தின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 3 திரைப்படங்களை தயாரித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறு தயாரிப்பாளர்களின் வாக்குரிமை பறிபோகும். எனவே, இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிசம்பர் 10-ஆம் தேதியன்று நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, பொதுக்குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதனை நியமித்தார். அவருக்கு சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதி, இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் 
விசாரணையை வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com