மாணவர்களுக்கு அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்னைகள்: உளவியல் ஆலோசனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி வரும் உளவியல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்னைகள்: உளவியல் ஆலோசனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி வரும் உளவியல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக நடமாடும் உளவியல் மையங்கள் (பிரத்யேக வாகனம்) செயல்பட்டு வருகின்றன. 

இந்த மையத்தில் உள்ள மனநல ஆலோசகர், தலைமை ஆசிரியர்களின் அழைப்பின் பேரிலும், வழக்கமான ஆய்வின் அடிப்படையிலும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவர். 

தற்போதைய சூழலில் மதிப்பெண் குறைவது, பெற்றோர் -ஆசிரியர்கள் கண்டிப்பது போன்ற விஷயங்களுக்குகூட மாணவர்கள் அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அண்மையில் வேலூர் மாவட்டத்தில் நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அவர்கள் சரியாக படிக்காததால் ஆசிரியர் கண்டித்ததுதான் காரணமாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு மனநல ஆலோசனை பெறுவது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. 

இதனைக் கருத்தில் கொம்டு பள்ளிக் கல்வித் துறையில் மனநல ஆலோசனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியது:

பள்ளிகளில் பெரும்பாலும் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களே இந்த ஆலோசனையைப் பெறுகின்றனர். மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, நினைவாற்றலைப் பெருக்குவதற்கு இந்த ஆலோசனைகள் பெரிதும் உதவும். ஆனால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்றனர்.

10 மையங்கள் போதாது... 

மிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால், மாநிலம் முழுவதும் 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்தான் செயல்பட்டு வருகின்றன. 

ஒரு மாவட்டத்தில் உள்ள மையம் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆலோசனை வழங்கும். இதன் எண்ணிக்கையை மாவட்டத்துக்கு ஒன்று என 32 - ஆக அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அதில் நவீன மருத்துவக் கருவிகள் இடம்பெற வேண்டும். மேலும் ஆண் ஆலோசகரிடம் மாணவிகள் தங்களது மனநலம் சார்ந்த பிரச்னைகளைத் தெரிவிக்க தயங்குகின்றனர். எனவே அனைத்து உளவியல் மைய வாகனங்களிலும் ஒரு ஆண், ஒரு பெண் ஆலோசகர்கள் இடம் பெற வேண்டும் என்றார் அவர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com