கட் அவுட், பேனர் வைக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது: உயர் நீதிமன்றம் கருத்து! 

மாநிலம் முழுவதும் கட் அவுட், பேனர் வைக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கட் அவுட், பேனர் வைக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது: உயர் நீதிமன்றம் கருத்து! 

சென்னை:  மாநிலம் முழுவதும் கட் அவுட், பேனர் வைக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

சென்னை அரும்பாக்கத்தினைச் சேர்ந்த திரிலோக்க்ஷன குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில் பொது கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட் அவுட், பேனர் வைப்பதனால் உண்டாகும் பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றை முறைப்படுத்தக் கோரியிருந்தார்.

விசாரணை முடிந்து அந்த வழக்கில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நீதிபதி வைத்யநாதன் தீர்ப்பு அளித்தார். அதன்படி உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் பொது இடங்களில் விளம்பரம் செய்வது குறித்து இயற்றப்பட்டுள்ள 1959-ஆம் ஆண்டு 'விளம்பரப்படுத்துதல் சட்டம்'  பற்றி ஆய்வு செய்து, அவ்வப்பொழுது தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

அத்துடன் இந்த தடை உத்தரவானது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கபப்ட்டுள்ளது . 

இந்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது இன்று நீதிபதி ரவிசங்கர் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது முன்னதாக நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் உள்ள "உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர்" என்ற வார்தையை நீக்குமாறு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.  ஆனால் அதனை மறுத்து நீதிபதிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் கட் அவுட், பேனர் வைக்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது. வெறுமனே வருவாய் நோக்குடன்தான் தற்பொழுது கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கூட தேர்தல் தொடர்பான இத்தகைய நடைமுறைகள் எல்லாமே மூங்கில் தட்டிகளில்தான் செய்யப்படுகின்றன. இங்கு மட்டும் நாம் ஏன் இத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்?

இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com