குளிர்காலம் தொடக்கம்: கல்லாறு வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் பட்டாம்பூச்சிகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப் பகுதியில் பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகமாகக் காணப்படுவதாக சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இடப்பெயர்ச்சியின்போது, கல்லாறு நீர்நிலைப் பகுதிகளில் கூட்டமாக மண் சகதியில் அமர்ந்து உடல் வெப்பத்துக்காக தாதுக்களை உறிஞ்சும் பட்டாம்பூச்சிகள்.
இடப்பெயர்ச்சியின்போது, கல்லாறு நீர்நிலைப் பகுதிகளில் கூட்டமாக மண் சகதியில் அமர்ந்து உடல் வெப்பத்துக்காக தாதுக்களை உறிஞ்சும் பட்டாம்பூச்சிகள்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப் பகுதியில் பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகமாகக் காணப்படுவதாக சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "ஒயில்டு லைப் ரேங்ளர்ஸ்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு, பாம்புகள் பாதுகாப்பு, யானை-மனித மோதல் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையான உயிர்ச்சூழலை அதிகம் கொண்ட கல்லாறு வனப் பகுதியில் பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பறவைகளின் வருகை, இடப்பெயர்ச்சி குறித்து இக்குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பட்டாம்பூச்சிகளின் வருகை குறித்து ஆய்வு செய்ய இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் தலைமையில் லெனின், கவின் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாம்பூச்சிகளை அதிகமாக ஈர்க்கும் கல்லாறு உயிர்ச்சூழல் குறித்து இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் கூறியதாவது:
கல்லாறு வனப் பகுதி, பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள், பிற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற உயிர்ச்சூழலை கொண்டுள்ளது. பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்ற செடிகளும், சேற்றில் அமர்ந்து உடலுக்கு வேண்டிய தாதுக்களை உறிஞ்சி எடுக்கத் தேவையான நீர்ச்சூழலும் இங்கு மிகுந்துள்ளது. இதனால், இடப்பெயர்ச்சி காலங்களில் வெகு தொலைவில் இருந்து பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், கல்லாறு வனப் பகுதியை நாடி வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி, அக்டோபர் வரையான வெப்ப காலங்களில் "காமன்மெக்ரேண்ட்', "காமன் பேண்டெட்', "கிரேட் ஆரஞ்சுடிப்', "காமன் கிராஸ் எல்லோ', "காமன் பைரட்', "டைனி கிராஸ் புளூ' ஆகிய வண்ணாத்து ப்பூச்சிகள் இங்கு வருகை தருகின்றன. 
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது "மங்கி பஜ்ஜல்', "காமன் பேண்டெட்', "ரஸ்டிக்', "நவாப், மேப்', "காமன் பேண்டெட் பீகாக்' வகை பட்டாம்பூச்சிகள் கல்லாறு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. மழைக் காலம் முடியும்போது, மலையுச்சிப் பகுதிகளிலிருந்து கல்
லாறு உள்பட சமவெளிப் பகுதிக்கு ஒரே இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் லட்சக்கணக்கில் இடம் பெயர்வதைக் காணலாம். இது கண்கொள்ளா காட்சியாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com