ஆப்கன் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
சென்னைப் பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி அகாதெமியில் கணினிகளை கையாளும் பயிற்சி மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் பெண்கள். (வலது) துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்.
சென்னைப் பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி அகாதெமியில் கணினிகளை கையாளும் பயிற்சி மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் பெண்கள். (வலது) துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
இந்திய ராணுவ பயிற்சி முறைகளை அறிந்து கொள்ளுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை சென்னை வந்தனர். அவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி வரை சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு திங்கள்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் நாட்டில் பெண் அதிகாரிகள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் இந்தியாவில் அதிநவீன பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது குறித்து சென்னை ராணுவ பயிற்சி மையத்தின் கேப்டன் சம்ரிதி கூறியது:-
21 வயது முதல் 40 வயது வரையிலான ஆப்கானிஸ்தான் பெண் அதிகாரிகளுக்கு போர்ப் பயிற்சிகள், துப்பாக்கிச் சூடு, மற்றும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. அதே போன்று ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 
நமது ராணுவத்தின் பயிற்சிகளை அவர்களுக்கு கற்பிக்கும் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு கற்றுத் தரப்பட்ட பயிற்சிகள் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வோம். 
மேலும் இந்தியக் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளச் செய்யும் வகையில் அவர்கள் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்.
இந்தியாவில் முதன் முறையாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவது இந்திய ராணுவத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com