மீனவர் போராட்டத்தை திசை திருப்ப முயன்றதாக 7 பேர் கைது

ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, குமரி மாவட்ட மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை திசைதிருப்ப முயன்றதாக சந்தேகத்தின் பேரில் சென்னை
கொல்லங்கோடு அருகே மீனவ கிராமத்தில் வன்முறையை தூண்ட முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.
கொல்லங்கோடு அருகே மீனவ கிராமத்தில் வன்முறையை தூண்ட முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, குமரி மாவட்ட மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை திசைதிருப்ப முயன்றதாக சந்தேகத்தின் பேரில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7 இளைஞர்களை கொல்லங்கோடு போலீஸார் கைது செய்தனர்.
ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, தூத்தூர் கடலோர மண்டலத்துக்கு உள்பட்ட கிராமங்களில் தொடர் போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திசைதிருப்பி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது, வன்முறை மற்றும் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு பல்வேறு தகவல்கள் வந்தனவாம். இதனடிப்படையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 7 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 'மக்கள் அதிகாரம்' என்ற அமைப்பைச் சேர்ந்வர்கள் என தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மருது (33), தூத்துக்குடி, சங்கர்லிங்க நகர் கணேசன் (35), மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அனஸ் (20), அந்த அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த ஆதி (37), பாளையங்கோட்டை, ஆரோக்கியநாதபுரம் கிங்சன் (23), அமைப்பின் உறுப்பினர்கள் கோவில்பட்டி, கூசாலிபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, திருநெல்வேலி கேடிசி நகர் அன்பு (32) என்பது தெரிய வந்தது.
இவர்கள், கொல்லங்கோடு அருகே மேடவிளாகம், பனவிளை பகுதியைச் சேர்ந்த கெஜின்குமார் (43) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்து, மீனவர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான பணிகளை மேற்கொண்டு, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, மருது உள்பட 7 பேரையும் கொல்லங்கோடு போலீஸார் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com