ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணப் பொருள்கள்

மிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்

மிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
டிசம்பர் முதல் வாரத்தில் ஒக்கிப் புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவிகளையும், நிவாரணப் பொருள்களையும் வழங்கி வருகின்றனர். 
இந்நிலையில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை-பெருஞ்சாணி பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. குடும்பத்துக்கு 25 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், தார்பாய் உள்ளிட்டவை இந்த நிவாரணப் பொருள்களில் அடங்கும். மின்வாரிய மத்திய அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com