கூரியர் சேவைக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தல்

கூரியர் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எஸ்.டி. கூரியர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூரியர் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எஸ்.டி. கூரியர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் தலைவர் கே.அன்சாரி பேசும்போது, பெண்களுக்கு மற்ற எந்த தொழிலை காட்டிலும் அதிகமாக வேலை வாய்ப்பை கூரியர் தொழில் வழங்கி வருகிறது. இதுதவிர, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேவை வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது ஜிஎஸ்டி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால், கூரியர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், கூரியர் சேவைக்கும் வரி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களும், இத்தொழிலில் பணிபுரிய விரும்பும் பெண்கள், இளைஞர்களும் வேலைவாய்ப்பை பெறுவர் .
நிர்வாக இயக்குநர் கே. நவாஸ் கனி பேசுகையில், தகவல் பரிமாற்றம், அஞ்சல் துறை என்பது வாய்ப்புகள் அதிகம் கொண்ட துறையாகும். சேவை நேர்த்தியுடனும், நேரத்துடனும் இல்லையெனில் வாடிக்கையாளர்கள் நிராகரித்து விடுவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். 
தொழிலதிபர் நல்லி குப்புசாமி, காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு, வளைகுடா நாடுகளின் பி.பி.எஸ்.குரூப் தலைவர் ஷேக் பாஷிம் சுலைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com