சாலைத் தடுப்புகளை ஒளிரும்படி அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சாலைத் தடுப்புகள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாலைத் தடுப்புகள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாலைத் தடுப்புகளை வைப்பது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் ஆலோசனைப்படி சாலைத் தடுப்புகள் எந்தெந்த இடங்களில் வைப்பது என்பதை சம்பந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல் துறையினர் தான் முடிவு செய்யவேண்டும். 
கனரக வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் போதுமான இடைவெளிகளில் இந்தச் சாலை தடுப்புகளை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் 100 மீட்டர் தூரம் வரை பிரகாசமாக தெரியும்படி ஒளிரும் வண்ணங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். 
மேலும், பொதுமக்கள் சாலைகளை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இந்த தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். சாலைகளை இரண்டாக பிரிக்கும் நிரந்தர கட்டுமானம் இல்லாத இடங்களில் எந்த மாதிரியான சாலைத் தடுப்புகளை எந்தெந்த இடங்களில் அமைப்பது என்பது குறித்து காவல் துறையே முடிவு செய்யலாம். மோட்டார் வாகனச் சட்டம் 370 -ஆவது பிரிவின்படி பண்டிகைக் காலங்கள், விழாக்கள், சோதனைச் சாவடிகள் அமைத்தல், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சமயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். 
இந்தப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் பணியமர்த்தப்பட வேண்டும். வணிக நோக்கில் வைக்கப்படும் சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைத் திருப்பும் வகையில் அல்லாமல், பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் இவை அமைக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com