ஒக்கி புயல் பாதிப்பை பேரிடராக உடனே அறிவியுங்கள்: ஸ்டாலின்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசை வலியுறுத்த கோரி மனு அளிக்கிறார் திமுக செயல்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசை வலியுறுத்த கோரி மனு அளிக்கிறார் திமுக செயல்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்டாலின் அளித்த மனு விவரம்:
ஒக்கி புயலால் வரலாறு காணாத பேரிடரை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தும், மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாக்க மாநில நிர்வாகம் முற்றிலும் தவறியிருக்கிறது. 
மாநிலத்தின் முதல்வரோ, இந்த துயரமான பேரிடர் குறித்தும், இன்னல்களுக்கு உள்ளான மக்களை பற்றியும் துளியும் கவலைப்படாமல், நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களிலும், இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். 
காணாமல் போன மீனவர்கள் மற்றும் இறந்த மீனவர்கள் குறித்து தலைமைச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முரண்பட்ட அறிக்கைகளை தருகின்றனர். முரண்பட்ட தகவல்களை அளிப்பதன் மூலம் அரசு நிர்வாகம் முற்றிலுமாக தோல்வியடைந்திருப்பதை உணர முடிகிறது.
இந்த நேரத்தில் காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து மீட்பதற்கு, மத்திய அரசின் தலையீடு உடனடியாக தேவைப்படுகிறது. 
மாநில அரசோடு இணைந்து மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய அரசு ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்திய மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் மற்றும் கடலோரப் படையினர், கடல் எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மனிதாபிமான அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மீட்புப் பணிகள் திருப்தி இல்லை: ஆனால், தற்போதுள்ள நிலைமையைப் பார்க்கும்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மனித நேயமே வெளிப்படவில்லை என்பதால், தேடுதல் பணிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பதோடு, பணிகள் திருப்திகரமாகவும் இல்லை என்பதே உண்மை. 
ஒக்கி புயல் தாக்கி 15 நாள்கள் ஆன பிறகும்கூட, காணாமல் போன மீனவர்கள் மற்றும் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றிய சரியான புள்ளி விவரங்களை மத்திய - மாநில அரசுகள் தெளிவாக அறிவிக்காதது, குமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும் திரளான மீனவ மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி அறவழிப் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
எனவே, ஆளுநர் உடனடியாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கையாண்டு, மத்திய அரசினை வலியுறுத்தி, ஆழ்கடலில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கப்பல் படையின் சார்பில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி, மிகப்பெரிய தேடுதல் வேட்டையை முழு வீச்சில் தொடங்கிட உதவிட வேண்டும். புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தெரியப்படுத்தி, கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் உறுதி: மனுவை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தன்னைச் சந்தித்த திமுக தலைவர்களிடம் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுரேஷ் ராஜன், மனோ.தங்கராஜ், ஆஸ்டின், கே.பி.பி.சாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com