முதல்வர், துணை முதல்வரை விமர்சித்து முகநூலில் பதிவு: விவசாயி கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்பாக முகநூலில் விமர்சித்து கருத்து பதிவிட்ட விவசாயியை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்பாக முகநூலில் விமர்சித்து கருத்து பதிவிட்ட விவசாயியை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் தவசி மகன் கர்ணன் (44). விவசாயியான இவர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாகப் பேசி அதனை செல்லிடப்பேசியில் பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனையறிந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தேனி மாவட்ட செயலாளர் காஜாமைதீன் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கடந்த நவ.11 ஆம் தேதி புகார் செய்தார்.
இதன்பேரில் போலீஸôர் வழக்குப் பதிந்து கர்ணனை தேடிவந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை கர்ணனை கைது செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 
மேலும் இச்சம்பவம் தொடர்பாக பத்மநாபன், கோபி மற்றும் ராம்கி ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com