ஓராண்டுக்குப் பிறகு அறிவாலயம் வந்தார் கருணாநிதி

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு, கட்சித் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேசிய அவர், வருகைப் பதிவேட்டிலும்
ஓராண்டுக்குப் பிறகு அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி.
ஓராண்டுக்குப் பிறகு அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு, கட்சித் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேசிய அவர், வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். பின்னர் அவர் தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
உடல்நலம் காரணமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) இரவு வந்தார். கருணாநிதி உடல்நலத்துடன் இருந்த நாள்களில் காலையும் மாலையும் அறிவாலயத்துக்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். 
இந்நிலையில், உடல் நலிவுற்ற பிறகு கடந்த ஓராண்டாக அறிவாலயம் வராமல் இருந்த கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணியளவில் திடீரென வந்தார். கருணாநிதியை அவரது அறைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலர் துரைமுருகன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். கருணாநிதி அவரது அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மகள் செல்வி ஆகியோரும் கருணாநிதியுடன் வந்தனர். 
தனது கொள்ளுப்பேரன் திருமணத்தையும் அண்மையில் நடத்தி வைத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் திமுகவின் முப்பெரும் விழா, அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் அறிவாலயம் வந்து சென்றார்.
கருவியை அகற்றப் பரிசீலனை: கருணாநிதிக்கு சுவாசத்தை சீராக்குவதற்காக "டிரக்யாஸ்டமி' கருவி பொருத்தப்பட்டுள்ளது. கருணாநிதி உடல்நலம் தேறியுள்ள நிலையில் அந்தக் கருவியை அகற்றுவது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com