குரூப் 4-வி.ஏ.ஓ., தேர்வு: விண்ணப்பிக்க 20-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
குரூப் 4-வி.ஏ.ஓ., தேர்வு: விண்ணப்பிக்க 20-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் மா.விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., பிரிவுகளில் 9 ஆயிரத்து 351 காலியிடங்களுக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் காலக்கெடு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டும், இதர விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 20 ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 21 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
18.33 லட்சம் பேர்: குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுக்கென இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக் காட்டிலும் இந்தத் தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 
எழுத்துத் தேர்வானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு இதன்பிறகு கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com