முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அட்டவணை: பிளஸ் 2, 10 ஆம் வகுப்புக்கும் வெளியீடு

தமிழகத்தில் முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம்
முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அட்டவணை: பிளஸ் 2, 10 ஆம் வகுப்புக்கும் வெளியீடு

தமிழகத்தில் முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையிலும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டு (2017-2018) முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, இப்போது பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார்செய்யும் வகையில் பொதுத் தேர்வு கால அட்டவணை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் ஆகியவற்றை தேர்வுத் துறை கடந்த ஜூன் 7-ஆம் தேதி வெளியிட்டது. இப்போது, ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன என்பதற்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பிளஸ்2 பொதுத்தேர்வு கால அட்டவணை

மார்ச் 1 வியாழக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 2 வெள்ளிக்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 5 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 9 வெள்ளிக்கிழமை வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 12 திங்கள்கிழமை கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
நியூட்ரிஷியன் மற்றும் டயடிக்ஸ்
மார்ச் 15 வியாழக்கிழமை அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்
மார்ச் 19 திங்கள்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 26 திங்கள்கிழமை வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 2 திங்கள்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக கணிதம்
ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல்,சிறப்புத் தமிழ்


தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது

பிளஸ் 1 வகுப்பு கால அட்டவணை
மார்ச் 7 புதன்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 8 வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 13 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 14 புதன்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20 செவ்வாய்க்கிழமை கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், 
நியூட்ரிஷியன்- டயடிக்ஸ்
மார்ச் 23 வெள்ளிக்கிழமை வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 27 செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல் 9 திங்கள்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல்,
சிறப்பு தமிழ்
ஏப்ரல் 16 திங்கள்கிழமை அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது

பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான அட்டவணை 
மார்ச் 16 வெள்ளிக்கிழமை தமிழ் முதல் தாள்
மார்ச் 21 புதன்கிழமை தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 28 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 4 புதன்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை கணிதம்
ஏப்ரல் 12 வியாழக்கிழமை மொழி விருப்பப்பாடம்
ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை அறிவியல்
ஏப்ரல் 20 வெள்ளி சமூக அறிவியல்
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com