ஆர்.கே.நகரில் நாளையுடன் நிறைவடைகிறது பிரசாரம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ஆர்.கே.நகரில் நாளையுடன் நிறைவடைகிறது பிரசாரம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ்,, பாஜக சார்பில் கரு.நாகராஜன், மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். டிடிவி தினகரனும் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
தீவிர தேர்தல் பிரசாரம்: வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த 7-ம் தேதி முதல், கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினர். இந்த நிலையில், கட்சிகள் வாக்கு சேகரிப்பின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுதி முழுவதும் 7 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 6 பறக்கும்படைகள், 12 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் 5 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே தொகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பல லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அனுமதி பெறாமல் நுழைந்த ஏராளமான வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி, தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் இடத் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பணப் பட்டுவாடா குறித்து புகார் அளித்தன.
இந்த நிலையில் டிசம்பர் 21 ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளதால், அதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரசாரத்தை கட்சிகள் முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி, பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவு பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com