கார் விபத்து தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கார்களில் விபத்து தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்ஸ்யூமர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா,

கார்களில் விபத்து தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்ஸ்யூமர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா, புதுதில்லியில் உள்ள கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதுகுறித்து கன்ஸ்யூமர் வாய்ஸ் இயக்குநர் ஹேம்நாத் உபதியாய கூறியது: 
உலக அளவில் இந்தியா கார் விற்பனையில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 2.03 மில்லியன் கார்கள் விற்பனையாகின்றன. அதேசமயம் இந்தியாவில்தான் அதிக அளவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. சாலை விபத்தினால் நாள்தோறும் 400 பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 1.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவது இந்தியாவில் உள்ள கார்களில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததேயாகும். 
நுகர்வோர் கார் வாங்கும்போது அதன் தோற்றம், விலை மற்றும் மற்ற ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் தருவதை போல பாதுகாப்பு அம்சங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான தானியங்கி வாகனங்கள் காற்றுப் பைகள், ஆண்டிலாக் பிரேக் சிஸ்டம்ஸ், மின்னணு உறுதிப்பாடு, கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. மேலும், புதிய கார் மதிப்பீட்டு திட்டம், சோதனை நடைமுறைகள், கார் செலவு குறைப்பு என்ற பெயரில் அவசியமான கார் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இந்தியாவில் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதுவே சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட காரணமாக அமைகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) டி.சண்முக பிரியா பேசியது:
பெரும்பாலான வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாதது, சாலை விதிகளைப் பின்பற்றாமல் செல்வது, அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, பள்ளிக்கூட மாணவர்கள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவது, அதிவேக டிரைவிங், இரு சக்கர வாகனங்களில் அதிக ஆள்களை ஏற்றிச் செல்வது போன்றவை சாலை விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகின்றன. எனவே, இதுபோன்ற தவறுகளை வாகன ஓட்டிகள் தவிர்த்தாலே சாலை விபத்துக்கள் வெகுவாக குறையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com