பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விவேகானந்தன், சென்னை பெருநகர காவல், நுண்ணறிவுப் பிரிவு முதல் நிலைக் காவலர் ஸ்ரீதேவி, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அணியின் காவலர் பாலாஜி ஆகியோர் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தனர்.
இதேபோன்று, திண்டுக்கல் வடமதுரை காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கிடுசாமி, திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழிப்பு: கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி தரப்பு பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், விழுப்புரம் திண்டிவனம் சின்னநெற்குணம் மதுரா எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லலிதா, திருவண்ணாமலை ஆரணி வட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, திருவள்ளுர் மாவட்டம் ஆவடி பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, வேலூர் மாவட்டம், ஆற்காடு சென்னசமுத்திரம் மதுரா மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 
உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com