பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சென்னை வியாசர்பாடி காவல் நிலைய போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் பொன்னுசாமி, சென்னை ஆவடி காவல் நிலைய தலைமைக் காவலர் செளரியப்பன், விருதுநகர் கூமாபட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் உமா மகேஷ்வரன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக, காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கார்மேகம், திருவாரூர் தேவங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், விழுப்புரம் வரஞ்சரம் காவல் நிலைய முதல்நிலை காவலர் வெங்கடேசன், கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4 - ஆம் அணி காவலர் கதிரேசன் ஆகியோர் உடல் நலக் குறைவு, சாலை விபத்து போன்ற காரணங்களால் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: நெல்லை ராதாபுரம் வட்டம் பழவூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிவேல், ஆண்டிபட்டி கண்டமனூர் உள்வட்டம் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், மதுரை புதுசுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண், சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆச்சி மற்றும் சரிதா ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இதேபோல், சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரைச் சேர்ந்த சிவலிங்கம், கிண்டி மடுவாங்கரையைச் சேர்ந்த பாஸ்கர், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி ஆகியோரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து த் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com