புத்தாண்டு விடுமுறை: சென்னையிலிருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆங்கிலப் புத்தாண்டு வரும் திங்கள்கிழமை (ஜன.1) கொண்டாடப்படுகிறது

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டு வரும் திங்கள்கிழமை (ஜன.1) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வழக்கமான விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் திங்கள்கிழமையும் இணைவதால் 3 நாள் தொடர் விடுமுறையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆன்மிகச் சுற்றுலா, முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 400 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: வழக்கமாக இயக்கப்படும் 3,300 பேருந்துகளுடன் புத்தாண்டு விடுமுறைக்காக 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகளை சென்னையிலிருந்து வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, மதுரை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை (ஜன.2) வரை ஊருக்குத் திரும்பியவர்கள் சென்னைக்குத் திரும்ப ஏதுவாக அதே எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு அளித்த அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் விடுமுறைக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊர் திரும்பத் தேவைக்கேற்ப புதன்கிழமை வரை இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com