பொங்கல் விடுமுறை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வருகை தரும் பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளும்
பொங்கல் விடுமுறை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வருகை தரும் பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16 -ஆம் தேதி வரை பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து பார்வையிட வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்வதற்காக பிற துறை அலுவலர்களுடன் டிசம்பர் 27-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வனத் துறை அலுவலர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர், மின்துறை, போக்குவரத் துறை, தமிழ்நாடு குடிநீர் வாரியம், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், அவசரகால உதவிகள் ஆகியவை குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் சுகாதாரமான இடம், மருத்துவ வசதி, வாழ்விடப் பராமரிப்பு, சத்தான உணவு, இயற்கை சூழல் பராமரிப்பு, சிறந்த நிர்வாகம் ஆகியவை காரணமாக பூங்காவில் உயிரினங்கள் வெற்றிகரமாக இனவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் பூங்காவில் அடைப்பிட இனவிருத்தி மூலம் நெருப்புக் கோழி, சருகு மான், ஓநாய், காட்டுப் பூனை, சிங்கம், காட்டெருமை, சாம்பல் நிற மலை அணில், நீல மான், நீர் யானை, சதுப்பு நிலமான், வெளிமான், கேளையாடு, தங்க நீல பஞ்சவர்ணக் கிளி, ஆப்பிரிக்க பழுப்பு நிறக் கிளி, காட்டுப்பன்றி ஆகிய வன உயிரினங்கள் பிறந்துள்ளன என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com