சென்னையில் புதைவிட மின்கம்பிகள்: திமுகவுக்கு அமைச்சர் பதில்

சென்னையில் பூமிக்குக் கீழே மின்கம்பிகளை அமைக்கும் பணிக்கு ரூ.13,790 கோடி தேவை என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சென்னையில் புதைவிட மின்கம்பிகள்: திமுகவுக்கு அமைச்சர் பதில்

சென்னையில் பூமிக்குக் கீழே மின்கம்பிகளை அமைக்கும் பணிக்கு ரூ.13,790 கோடி தேவை என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கீதாஜீவன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, துறைமுகம் எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு துணைக் கேள்வியை எழுப்பினார். அப்போது பேசிய அவர், "சென்னையில் குறைந்த, உயர் மின் அழுத்தக் கம்பிகள், மின்கம்பங்கள் மூலமாகச் செல்கின்றன. இதனால், விபத்துகள் அதிகம் ஏற்படுவதுடன் சீரற்ற வகையிலான மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர்க்க அனைத்து இடங்களிலும் புதைவிட மின்கம்பிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, "மேலே செல்லும் மின் கம்பிகளை அமைக்க ஆகும் செலவைவிட, தரைக்குக் கீழே பூமியில் பதிக்க 10 மடங்கு அதிகம் செலவாகிறது.
சென்னை முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.13,790 கோடி தேவைப்படுகிறது. வீடுகளுக்கு மேலே உயர் அழுத்த மின்பாதைகள் சென்றால் அதற்கு முன்வாரியம் முக்கியத்துவம் கொடுத்த அதனை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் தங்கமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com