பன்றிக்காய்ச்சல் 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் காணப்படும் சென்னை, வேலூர், திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் குளிர்காலத்தில் வைரஸ் பாதிப்புகளால் ஏற்படும் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவரிடம் இருந்து எச்1என்1 வைரஸ் கிருமி மற்றவருக்கு பரவுகிறது. எனவே, தனி நபர் சுகாதாரம் முக்கியமாகப் பேண வேண்டியது அவசியம்.
அண்டை மாநிலங்களிலும் பாதிப்பு: அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. இதனால் பிற மாநில எல்லைப் புறங்களில் வசிப்போருக்கும் இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது. இதனால் எல்லைப் புறங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியது:-
பன்றிக் காய்ச்சல் நோயை பருவ காலங்களில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, யாரும் பீதியடைய வேண்டாம். இதுவரை சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே, 4 மாவட்டங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிற மாவட்டங்களில் ஓரிருவருக்கு பாதிப்பு உள்ளது. அங்கும் கண்காணிப்பு உள்ளது.
இந்த ஆண்டு காலநிலையில் சற்று மாறுபட்டுக் காணப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பனி குறைந்து, கோடைக்காலம் தொடங்கி, வெயில் அதிகரிக்கத் தொடங்கினால் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது குறையும் என்றார்.

கை கழுவும் பழக்கம் அவசியம்!

கழுவும் பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது:-
ஒருவர் தும்முவது அல்லது இருமுவதன் மூலம் பன்றிக்காய்ச்சல் வைரஸ் நேரடியாக 20 சதவீத பேரைத் தாக்குகிறது. ஆனால் 80 சதவீதம் கைகளினாலேயே பரவுகிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மாடிப் படிகள், கைப்பிடிகள், பொருள்களை பிறர் பயன்படுத்தும்போது பன்றிக் காய்ச்சல் எளிதாகப் பரவிவிடும்.
எனவே, அடிக்கடி கை கழுவுவது அவசியம் ஆகும். சாப்பிடுவதற்கு முன், கழிவறையைப் பயன்படுத்திய பின், வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற உடன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் எனக் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

15 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள்!

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான டாமிஃப்ளூ மாத்திரைகள் தயாராக உள்ளன என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:-
10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன. சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் இருப்பில் வைத்துள்ளன. இது தவிர, அரசிடம் டாமிஃப்ளூ மாத்திரைகளை கேட்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

மாவட்டத்துக்கு 4 மருத்துவர்கள்

ரு மாவட்டத்தில் 2 குழந்தைகள் நல மருத்துவர்கள், 2 பொது மருத்துவர்கள் என 4 பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள்

திக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், மேற்கொண்டு இந்த நோய் பரவாமலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் பொது சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. 11 அரசு ஆய்வகங்களும், 13 தனியார் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் எந்த மூலையில் இருந்து ரத்த மாதிரி எடுத்து அனுப்பினாலும் உடனடியாக ஆய்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ள
முடியும்.

பிற நோய்கள்

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு பிரச்னைகளும் காணப்படுவதால், இந்த நோய் எளிதில் தாக்கிவிடுகிறது. உயிரிழந்தவர்களில் 4-க்கும் மேற்பட்டோருக்கு பிற நோய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பிற நோய்கள் இருப்போர் அவ்வப்போது தங்கள் உடல் நிலையைப் பரிசோதித்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

பள்ளிகளில் கூடுதல் கவனம்

அனைத்துப் பள்ளிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 நாள்களுக்கு மேல் காய்ச்சல்

ருவருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக சரியான மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக வேண்டும். சுய மருத்துவம், அருகிலிருக்கும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை வாங்குவது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது. இரு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால் உடனடியாக பன்றிக் காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதைனையை மேற்கொள்ள வேண்டும்.

கை கழுவும் பழக்கம் அவசியம்!

கழுவும் பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது:-
ஒருவர் தும்முவது அல்லது இருமுவதன் மூலம் பன்றிக்காய்ச்சல் வைரஸ் நேரடியாக 20 சதவீத பேரைத் தாக்குகிறது. ஆனால் 80 சதவீதம் கைகளினாலேயே பரவுகிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மாடிப் படிகள், கைப்பிடிகள், பொருள்களை பிறர் பயன்படுத்தும்போது பன்றிக் காய்ச்சல் எளிதாகப் பரவிவிடும்.
எனவே, அடிக்கடி கை கழுவுவது அவசியம் ஆகும். சாப்பிடுவதற்கு முன், கழிவறையைப் பயன்படுத்திய பின், வீட்டிலிருந்து அலுவலகம் சென்ற உடன், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் எனக் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

15 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள்!

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான டாமிஃப்ளூ மாத்திரைகள் தயாராக உள்ளன என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:-
10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன. சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் இருப்பில் வைத்துள்ளன. இது தவிர, அரசிடம் டாமிஃப்ளூ மாத்திரைகளை கேட்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com