பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: கேரளத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:-
பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தவில்லை. பாலாற்றில் ஆந்திரம் தடுப்பணைகளைக் கட்டுவதையும், பவானி ஆற்றின் குறுக்கே கேரளம் தடுப்பணையைக் கட்டுவதையும் நிறுத்தவில்லை என்றார்.
அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசியது:-
அதிமுக ஆட்சியில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனும் பொருள்வரும்படி ஸ்டாலின் பேசுகிறார். 2006-11-ஆம் ஆண்டு வரை திமுகவின் ஆட்சியில்தான் "இல்லை' எனும் நிலை இருந்தது. 2011-இல் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதற்குப் பிறகு இல்லை என்ற சொல்லையே இல்லாமல் ஆக்கினார்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரம் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் முதலில் தெரிவித்துவிட்டு, அதன் பிறகே, உச்ச நீதிமன்றத்தை நாட முடியும். அதன்படி, பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரளம் 6 தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். பதில் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு சார்பில் புதன்கிழமை வழக்கு தொடரப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com