பாழடைந்து கிடக்கும் ஆட்சியர் அலுவலக வளாகம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் குப்பை கூளங்களாகவும், பாழடைந்தும் கிடக்கிறது. இதனால், துர்நாற்றம், விஷ ஜந்துகளின் நடமாட்ட அச்சத்துடன் அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் குப்பை கூளங்களாகவும், பாழடைந்தும் கிடக்கிறது. இதனால், துர்நாற்றம், விஷ ஜந்துகளின் நடமாட்ட அச்சத்துடன் அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவாசி சாலையில் உள்ளது. இந்த வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மையம், பேரிடர் மேலாண்மை மையம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் பின்புறப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டும், வர்தா புயலால் சாய்ந்த மரக்கிளைகள், செடி, கொடிகள் குவிக்கப்பட்டும் கிடக்கின்றன.
இதனால், இவற்றில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைக் கூளங்களிலிருந்து பாம்பு, தேள், அரணை உள்ளிட்ட விஷ ஜந்துகள் அவ்வப்போது உலாவுகின்றன. அலுவலகத்துக்குள் இவை புகுந்துவிடுமோ என்ற அச்சத்துடன், அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறமுள்ள குப்பைகள், புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com