மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எமஎல்ஏ பாராட்டு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்எல்ஏ இன்பதுரை பாராட்டு தெரிவித்தார். எனினும், அவர் தொடர்ந்து பேசிய பேச்சால் அவையில் சலசலப்பும் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்எல்ஏ இன்பதுரை பாராட்டு தெரிவித்தார். எனினும், அவர் தொடர்ந்து பேசிய பேச்சால் அவையில் சலசலப்பும் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இன்பதுரை பேசியதாவது: ஜல்லிக்கட்டுக்காக சட்டம் இயற்றினோம். ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டோம் என்று மு.க.ஸ்டாலின் ஏற்றுகொண்டார். அவர் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
அதேசமயம், "ஜல்லிக்கட்டுக்குத் தடை இருந்தபோதும், நாங்கள் (திமுக) தடையில்லாமல் ஜல்லிக்கட்டை நடத்தினோம். ஆனால், நீங்கள் (அதிமுக) நடத்த முடியவில்லை' என்றும் கூறினார். ஒரு பெண் குழந்தை பெறலாம்.
ஆனால், அந்தக் குழந்தை திருமணத்துக்கு முன்பு பெற்றதாக இருக்கக் கூடாது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் சட்டம் கொண்டு வந்ததால் பயன் இல்லை என்றார்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் எழுந்து, சிறிது நேரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிறகு சமாதானம் அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com