மு.க.ஸ்டாலின் பேச்சு நீக்கம்: திமுக கடும் எதிர்ப்பு

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசிய சில வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் பேச்சு நீக்கம்: திமுக கடும் எதிர்ப்பு

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசிய சில வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அரசின் செயல்பாடுகள் குறித்து பேசியபோது, பயன்படுத்திய ஒரு வார்த்தையை நீக்குமாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். ஆனால் பேரவைத் தலைவர் தனபால் அதை நீக்காமல் அது அப்படியே இருக்கட்டும் என்றார்.
இந்த நேரத்தில் ஓ.எஸ்.மணியன் கூறிய ஒரு வார்த்தையை நீக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் கூறினர். அதனை ஏற்று பேரவைத் தலைவர் அந்த வார்த்தையை நீக்கினார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசிய வார்த்தையையும் பேரவைத் தலைவர் நீக்கினார். இதனை ஏற்காமல் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வெளிநடப்பு செய்யப் போவதாகக் கூறினர்.
அப்போது அவை நடவடிக்கைகளும் முடிவடைந்துவிட்டதால் அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதாக தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com