"விரைவாக அரசின் திட்டப் பணிகள்'

மாவட்ட ஆட்சியர்களின் ஆண்டு கூட்டம் நடைபெறாவிட்டாலும், அரசின் திட்டப் பணிகள் விரைந்து நடைபெறுகின்றன என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

மாவட்ட ஆட்சியர்களின் ஆண்டு கூட்டம் நடைபெறாவிட்டாலும், அரசின் திட்டப் பணிகள் விரைந்து நடைபெறுகின்றன என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது: வர்தா புயல் பாதிப்பு, வறட்சியில் தமிழகம் உள்ளது. இதற்கான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் அரசுப் பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுக் கூறியது: கூட்டம் நடைபெறாததால் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது தவறு. திட்டம் சார்ந்த பணிகளும், திட்டம் சாரா பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன.
அனிதா ராதாகிருஷ்ணன்: வர்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதற்கு உடனடியாக மரம் நடுவதுதான் சரியான முறையாக இருக்கும். ஆனால், மரம் நடுவதற்கு நீங்கள் (அதிமுக) நாள் குறித்துள்ளீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம்: இந்த நாட்டுக்கு சேவை செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்தச் சேவைக்காக அவரது பிறந்த நாளில் மரக்கன்று நடும் விழா நடத்துகிறோம். அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது சேர்ந்துள்ள இடத்துக்கு விசுவாசமாகப் பேசுகிறார். அதிமுகவில் இருந்தபோது அவர் எப்படியெல்லாம் பேசினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com