11 சட்டப் பேரவை குழுக்கள் அமைப்பு

சட்டப் பேரவை குழுக்களுக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சட்டப் பேரவை குழுக்களுக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்தக் குழுக்களை விரைந்து அமைக்க வேண்டும் என திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 11 குழுக்களுக்கான தலைவர்களையும், அந்தக் குழுக்களுக்கான 16 உறுப்பினர்களையும் பேரவைத் தலைவர்
தனபால் புதன்கிழமை அறிவித்தார்.
தலைவர்கள் யார்-யார்? மதிப்பீட்டுக் குழுத் தலைவர்- பி.எம்.நரசிம்மன், பொதுக்கணக்கு குழு- கே.ஆர்.ராமசாமி, பொது நிறுவனக் குழு- எஸ்.முத்தையா, அவை உரிமைக் குழு-
பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பேரவை விதிகள் குழு- பேரவைத் தலைவர் தனபால், அரசு உறுதிமொழிக் குழுத் தலைவராக சி.ராஜா, அவைக் குழு- சண்முகநாதன், சட்ட விதிகள் ஆய்வுக் குழு- பழனியப்பன், மனுக்கள் குழு- ராஜேந்திரன், பேரவை நூலகக் குழு- ராமலிங்கம், ஏடுகள் குழு- செந்தில்பாலாஜி.
திமுக வெளிநடப்பு: இதில், பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பொறுப்பு திமுகவுக்கு அளிக்கப்படாததற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரின் இருக்கையைச் சூழ்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விதிகளின்படியே தேர்வு: அதன் பிறகு பேரவைத் தலைவர் தனபால் கூறியது:-
விதிகளின்படியும், அதிகாரத்தின்படியும், திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படிதான் தேர்வு நடைபெற்றுள்ளது.
2006-11-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பதவி அளிக்காமல், காங்கிரஸýக்கு அளிக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com