அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலா, டிடிவி தினகரன் மனுக்கள் தள்ளுபடி

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத
அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலா, டிடிவி தினகரன் மனுக்கள் தள்ளுபடி

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்புச் சாதனங்களை இறக்குமதி செய்ததில் அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது 1996-இல் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சசிகலாவின் தோழியும் வெளிநாடு வாழ் இந்தியருமான சுசிலா ராமசாமி என்பவரது வங்கி கணக்கிற்கு 19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலர்கள் வந்துள்ளன.

இவ்வளவு பெரிய தொகை பெறுவதற்கு அவருக்கு நிதி ஆதாரம் இல்லை. இந்த தொகையில் இருந்து சென்னையைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு சுசிலா ராமசாமி கடன் கொடுத்துள்ளார். அவர் சசிகலாவுக்கு ரூ.3 கோடியே 52 லட்சத்தை கடன் கொடுத்துள்ளார்.

இந்த கடன் தொகை பரணி பீச் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பெயர் அளவில் செயல்படும் நிறுவனமாகும். வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவர் மூலம் பணத்தைப் பெறுவதற்காக இந்த நிறுவனம் பயன்பட்டுள்ளது என்பதை கீழமை நீதிமன்ற நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

இந்த நிறுவனத்திற்கு வந்த கடன் தொகை மூலம்தான் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் பங்குகளை சசிகலா வாங்கியுள்ளார். எனவே, இவர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய முகாந்திரம் உள்ளது.

எனவே சசிகலாவை விடுதலை செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல தங்கள் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா, டிடிவி தினகரன் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.சொக்கலிங்கம், பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா, டிடிவி தினகரன் பங்கெடுóத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கை இருவரும் எதிர்கொள்ள வேண்டும் என்று இருவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தும், அமலாக்கத்துறையினர் தொடர்ந்த மனுவை ஏற்றும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com