உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக - திமுக விவாதம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக -திமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக -திமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
உள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக்கால நீட்டிப்பு சட்டமசோதா குறித்த விவாதத்தில் பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி பேசியது:
உள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக்கால நீட்டிப்பு மசோதாவை எதிர்க்கிறோம். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற கூடாது என்று நீதிமன்றத்துக்கு சென்றதே திமுகதான் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்று திமுக செல்லவில்லை. தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்றுதான் சென்றோம்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 2006 -இல் திமுக ஆட்சியில் மாநகராட்சித் தேர்தல் எப்படி முறையாக நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவர். சென்னையில் 99 வார்டுகளுக்கு முறையாக தேர்தல் நடைபெறவில்லை என்று மறுதேர்தல் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இப்போது, அதிமுக ஆட்சியில் இன்னும் தேர்தலே நடைபெறவில்லை. அதற்குள் முறைகேடு என்கிறீர்கள்.
மு.க.ஸ்டாலின்: உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பிலேயே முறைகேடு என்று சென்னை உயர் நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே முறையாகத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com