ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு முக்கிய விஷயங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு மாற்றமும், ஏமாற்றமும் உள்ள அறிக்கையாக அமைந்துள்ளது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாதது வருத்தம் அளிக்கிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர்: மத்திய நிதிநிலை அறிக்கை நோக்கம் இல்லாமல் வார்த்தை ஜாலங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது. இதன் நாட்டு மக்களும் பயனும் கிடைக்கப்போவதில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ.2000-க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஒரு சில நன்மைகளையும், ஏராளமான ஏமாற்றங்களையும் கொண்ட ஆவணமாக அமைந்திருக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பயன் அளிக்காத, சாமானியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மத்திய நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும், போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பண மதிப்புக் குறைப்புக்குப் பின்னர் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைக்கப்பட்டது. இப்போது மேலும் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், வீட்டு வசதி பெருகும்.
விவசாயிகளுக்கான கடன் உதவி, கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கோடி என்ற அளவில் இருந்து இந்த ஆண்டு பத்து இலட்சம் கோடியாக வழங்கப்படுகின்றது. ஆனால், நதி நீர் இணைப்புப் பற்றிய அறிவிப்பு இல்லை. பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய இதுவரை சட்டம் கிடையாது. அதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்தத்தில், இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வரவு செலவுத் திட்டம்.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன்: தமிழகத்துக்குப் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை-குமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததும், தென்ன நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாததும் ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: ஏழை, எளிய மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com