ஜல்லிக்கட்டு வன்முறை: ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டு வன்முறை: ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, ஜனவரி 23, 24 ஆகிய இரு நாள்களில் வன்முறை நடந்தது. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ, பிற மத்திய புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசாணையை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பி.வில்சன் முன் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போதைய சூழலில் மனு உகந்ததல்ல என்றும் மனுதாரர் ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் வழங்கலாம் என்றும் கூறினர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாகக் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கூறினர். இதன்பேரில், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com