தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை

மத்திய அரசின் 2017 -2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்) தமிழகத்துக்கு புதிய ரயில்வே திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்தார்.
தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டங்கள் இல்லை

மத்திய அரசின் 2017 -2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்) தமிழகத்துக்கு புதிய ரயில்வே திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
மத்திய அரசின் 2017 -2018ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில், அந்தந்த மாநிலங்களுக்கான ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இரண்டு நாள்களுக்கு பின்பே அறிவிக்கப்படும். எனினும், இந்தாண்டு தமிழகத்துக்கு புதிய ரயில்வே திட்டங்களோ, புதிய விரைவு ரயில்கள் தொடர்பான அறிவிப்புகளோ இல்லை.
தாம்பரத்தை ரயில் முனையமாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும். அதேசமயம், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்கும் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, மொரப்பூர் -தருமபுரி புதிய வழித்தடத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அதிநவீன ரயில் நிலையமாக மாற்றப்படவுள்ளது. இதற்காக 42 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும்.
கடந்த 2015 டிசம்பரில் ரூ.5,603 கோடியாக இருந்த தெற்கு ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ 5,505 கோடியாக உள்ளது என்றார் வசிஷ்டா ஜோரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com