பதிலுரையின்போது குறுக்கிட அனுமதி

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டு கேள்வி எழுப்ப அனுமதித்து, அதற்குப் பதிலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டு கேள்வி எழுப்ப அனுமதித்து, அதற்குப் பதிலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். ஆளுநர் உரை மீது முதல்வர் பதிலுரை வழங்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டுப் பேசுவதற்கு விதி உண்டு. எனினும், கடந்த காலங்களில், அனுமதி வழங்கப்படாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பதிலுரைத்துப் பேசியபோது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து சில கேள்விகளை எழுப்ப முயற்சித்தார்.
அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி வழங்குமாறு பேரவைத் தலைவரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதையடுத்து, துரைமுருகன் பேசி, பதில் பெற்றார்.
அதைப்போல எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி, பதில் பெற்றார்.பின்னர், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எழுந்து குறுக்கிட முயற்சித்தபோது, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கூறியதன்பேரின் ஆஸ்டினுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com