பேரவை: "நீட்' தேர்வுக்கு எதிரான மசோதா உள்பட 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

"நீட்' தேர்வுக்கு எதிரான மசோதா உள்பட 12 சட்ட மசோதாக்கள் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.

"நீட்' தேர்வுக்கு எதிரான மசோதா உள்பட 12 சட்ட மசோதாக்கள் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
"நீட்' தேர்வுக்கு பதிலாக, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட மசோதா, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை வரும் ஜுன் மாதம் வரை நீட்டிக்க வகை செய்யும் மசோதா, சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் அனுமதியின்றி கழிவுநீர் விடுவதை தடை செய்யவும், மேலும் அதனை தடுக்கும் வகையில் அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான மசோதா உள்ளிட்ட 12 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத் திருத்த மசோதா பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த 23 -ஆம் தேதியே பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, பேரவை கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பே அது சட்டமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com