பேரவையை நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள்: திமுக, அதிமுகவினருக்கு தனபால் வேண்டுகோள்

சட்டப்பேரவையை நடத்த ஒத்துழைப்புத் தர வேண்டுமென அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையை நடத்த ஒத்துழைப்புத் தர வேண்டுமென அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் பூங்கோதை எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது, திமுக -அதிமுக இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு பேசியது:
திமுக உறுப்பினர்கள் பேசுவதை நாங்கள் கவனமாகக் கேட்டு பதில் சொல்கிறோம்.
ஆனால், நாங்கள் பதில் சொல்வதை அவர்கள் கேட்பதே கிடையாது. நாங்கள் பேசுகிறபோது எந்தத் தவறை கண்டுபிடித்தீர்கள்? இப்படி கூச்சல் -குழப்பம் செய்தால் எப்படி பதில் சொல்வது? பேரவைத் தலைவரான தாங்கள், இருதரப்பிலும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
அமைச்சரின் இந்த கருத்தைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தனபால் பேசியது:
பல விஷயங்களில் உறுப்பினர்கள் பேசும்போது என்னைப் பார்த்து பேசினாலே போதும் எந்தப் பிரச்னையும் வராது.
யார் பேசினாலும் பொறுமையாக மற்றவர்கள் கேட்க வேண்டும். அதன்மீது பேச வாய்ப்புக் கேட்டால் அவர்களுக்கு உரிய முறையில் தரப்படும். அதைவிடுத்து, இருக்கையில் அமர்ந்து கொண்டே கிண்டல் செய்வதால் பல பிரச்னைகள் வருகின்றன. எனவே, உட்கார்ந்து கொண்டே பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேரவையை நல்ல முறையில் நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் பேரவைத் தனபால்.
அவரது இந்த கருத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் சுமுக சூழல் ஏற்பட்டு கேள்வி நேரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com