தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 21 கன அடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 21 கன அடியாகச் சரிந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாத காரணத்தாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை நொடிக்கு 21 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 9.34 டி.எம்.சி.