வளர்ச்சி திட்டங்கள் நிறைந்த பட்ஜெட்: தொழில், வணிக கூட்டமைப்பினர் கருத்து

மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தொழில் கூட்டமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு தொழில் கூட்டமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவர் பி.ரவிச்சந்திரன்: பட்ஜெட்டில் அதிர்ச்சியூட்டுóம் வகையில் எவ்வித எதிர்மறை அறிவிப்புகள் இல்லை. 2022 -ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், பதப்படுத்தும் தொழிலை முன்னேற்றும் வகையில் பால் பொருள்கள் உற்பத்தி, விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.
முருகப்பா குழுமங்களின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன்:
வேளாண் துறைக்கும் கிராமப்புற மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கதாகும். தனிநபர் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிக்கும். மேலும் வரி செலுத்துவதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளதும், வரி செலுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டதும் வரி செலுத்துவதை அதிகரிக்க உதவும்.
தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் ரபீக் அகமது: ரூ.50 கோடிக்கு கீழ் வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவிகிதம் வரி குறைப்பு வரவேற்கக்கூடியது. . கிராமப்புறம், இளைஞர்கள் நலன், வேளாண்மை துறை முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் க.மோகன்: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தனி நபருக்கும் குடும்பத்துக்கும் நடைமுறை செலவுகள் அதிகமாகி உள்ள சூழ்நிலையில், வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால் வணிகர்கள், மக்கள் பாதிக்கப்படுவர். முத்ரா கடன் உதவித் திட்டத்துக்கு ரூ.2.44 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
தென்னிந்திய வர்த்தக சபையின் சிறு குறு தொழில் துறை கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன்: ஒட்டுமொத்த அளவில் நல்ல பட்ஜெட். சிறு குறு தொழில் துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லை. வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். அதை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு சிறு குறு தொழில் துறை சங்கத்தின் துணைத் தலைவர் மோகன்: பொதுவாக இது நல்ல பட்ஜெட். ரூ.50 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்பவர்களுக்கு 5 சதவிகிதம் வரியை குறைத்துள்ளனர்.
அதே நேரத்தில், வராக்கடன் குறைப்பு பற்றியும், சிறு குறு தொழிலில் வட்டி விகிதம் குறைப்பு குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com