ஸ்டாலின் தெரிவித்த வார்த்தை நீக்கம்: பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆட்சி நிர்வாகங்கள் குறித்து குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய சொல்லுக்குப் பதில் தரும் வகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை பேசினார். இந்த இருவரது சொற்களையும் பேரவைத் தலைவர் பி.தனபால் நீக்கினார்.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்னையை மு.க.ஸ்டாலின் எழுப்பி, இருவரின் கருத்துகள் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இந்த வேண்டுகோளை ஏற்க பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்து, ஏற்கெனவே உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி காரணங்களையும் விளக்கினார்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின், சிறிது நேரத்தில் அவைக்குத் திரும்பி பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com