ஆர்.கே.நகர் தொகுதியில் மே மாதம் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு: ராஜேஷ் லக்கானி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை கூறியதாவது:
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்த 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 வாக்காளர்களில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர் மட்டுமே தங்களது செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்களுக்கு மட்டும், தேசிய வாக்காளர் தினத்தில் (ஜன.25) இருந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய குறியீட்டை அருகாமையில் உள்ள இணைய சேவை மையங்களில் காண்பித்து, வண்ண வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இலவச சேவையை பெற விரும்பும் புதிய வாக்காளர்கள் தங்களுடைய செல்லிடப்பேசி எண்ணை 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
சென்னையில் காலியாகவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 5 -ஆம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதையறிந்து, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவிப்பை குறித்த நேரத்தில் வெளியிடும் என்றார் ராஜேஷ் லக்கானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com