ஆளுநர், முதல்வர் மோதலால் புதுவைக்கு கூடுதல் நிதி கிடைக்கவில்லை: அதிமுக புகார்

துணைநிலை ஆளுநர், முதல்வர் மோதலால் புதுவைக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி கிடைக்கவில்லை என அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துணைநிலை ஆளுநர், முதல்வர் மோதலால் புதுவைக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி கிடைக்கவில்லை என அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் மற்றும் துணைநிலை  ஆளுநரின் தொடர் மோதல் போக்கினால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் எரிச்சலுடன் உள்ளது.

மாநில முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தில்லிக்கு சென்று பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்டார். இந்த ஆண்டிற்காக கூடுதல் நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை கேட்டதாகவும் தெரிவித்தார். 

இதே போல் துணைநிலை ஆளுநரும் மத்திய அமைச்சர்களை சந்தித்து திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால் இருவரின் மாறுபட்ட செயலினால் மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகபடியான நிதியை ஒதுக்கவில்லை. புதுச்சேரிக்கு மத்திய அரசால் இந்த ஆண்டு திட்ட செலவினனங்களுக்கு 805 கோடி ரூபாயும், திட்டமில்லா செலவினங்கள் 515 கோடி ரூபாயும், கடன் தொகை 72 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
மழை பாதிப்பு ரூ.35 கோடி
2015-ம் ஆண்டு புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் மாநில மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி ரூ.140 கோடி ருபாய் அளவில் இழப்பீட்டு தொகை கோரினார். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். அந்த வகையில் கூடுதலாக 35 கோடி ரூபாய் தான் தற்போது வழங்கியுள்ளது.
காங்கிரஸ் அரசு செய்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் தான் நிருபிக்க தயாராக உள்ளதாகவும், இதற்கு முதல்வர் நாராயணசாமி பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுப்பினார். ஏனாமில் மட்டும் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

துறைமுக முகத்துவாரம் தூர்வாருவதில் அரசின் முறையற்ற செயல்பாடுகளால் மீனவர்கள் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு படகிற்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தூர்வாரும் பணி நடைபெறாதால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு முதல்வரும், ஆளுநரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சலால் மக்கள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com