சட்டப் பேரவையில் பேச திமுகவினருக்கு வாய்ப்பு மறுப்பு

சட்டப்பேரவையில் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப் பேரவையில் பேச திமுகவினருக்கு வாய்ப்பு மறுப்பு

சட்டப்பேரவையில் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு அனுமதி, "நீட்' தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட தமிழக நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகளை திமுக முழுமனதாக ஆதரித்தது. அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துக் கூறவும் திமுக தயங்கவில்லை. ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக நேரத்தை ஒதுக்கினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள்- அறிவித்த திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாட்டின் செயலாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத அமைச்சர்கள், சட்டப்பேரவையைத் துதிபாடும் மன்றமாக மாற்றி, கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நான் கூறிய ஒரு வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினர். அது பயன்படுத்தக் கூடாத வார்த்தை இல்லை. எனவே, அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், அனுமதி அளிக்கவில்லை.
பேரவையை ஒழுங்குபடுத்த வேண்டிய பேரவைத் தலைவர் ஒரு தரப்பு நடுவர் போல செயல்படுகிறார். முன்னவரான முதல்வரும் கவனித்தும் கவனிக்காத வகையில் ஆழ்ந்திருக்கிறார்.
எனவே, சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காவிட்டால் மக்கள் மன்றத்தில் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com