தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர் பலி: உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றவர் திடீரென உயிரிழந்துள்ளதால், அவரது உறவினர்கள் காவல்நிலையத்தை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றவர் திடீரென உயிரிழந்துள்ளதால், அவரது உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் உள்ள அபிஷேக நாதர் கிறிஸ்து ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை அசல விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போல்பேட்டையைச் சேர்ந்த பாண்டியராஜன்(34) கலந்துகொணாடார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாண்டியரஜன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாண்டியராஜன் தனக்கு நெஞ்சுவலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டியராஜன் உயரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாண்டியரஜன் மாரடைப்பு காரணமாக உயரிழந்து விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு வந்த பாண்டியராஜனின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com