பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வெள்ளை அறிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வெள்ளை அறிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பணமதிப்பு நீக்க அறிவிப்பில் முறையான திட்டமிடுதல் இல்லாததால், புதிய ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு பணப்புழக்கம் இல்லாத நிலை உருவானதே தவிர, சாதகமான பலன்கள் எதுவும் ஏற்படவில்லை.
திரும்பப் பெறப்பட்ட பழைய நோட்டுகளின் மதிப்பு, வங்கிகளால் வழங்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? என்பதை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ இன்று வரை வெளியிடவில்லை. மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், நிதிநிலை அறிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டன. அதில் பணமதிப்பு நீக்கம் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அரசுத் தரப்பிலிருந்து ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.
பணமதிப்பு நீக்கம் குறித்த விவரங்களை ஒரு மணி நேரத்தில் திரட்டி விட முடியும். டிசம்பர் 13-ஆம் தேதி வரை 2, 3 நாள்களுக்கு ஒருமுறை வங்கிகளுக்கு பழைய பணம் எவ்வளவு வந்தது? புதிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு விநியோகிக்கப்பட்டன? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு விவரங்களை வெளியிடாததன் மர்மம் என்ன?
மாறாக, பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதன் நோக்கமே பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகவே என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது.
இதுபோன்ற திசை திருப்பும் வேலைகளைக் கைவிட்டு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளில் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு எவ்வளவு? கைப்பற்றப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com