மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே: விஜயகாந்த்

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே: விஜயகாந்த்

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை.
வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டதோடு, மத்திய குழுவினரும் ஆய்வு மேற்கொண்டு திரும்பினர். நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
வறட்சியைப் போக்கவும், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கவும், நதிநீர் இணைப்புத்திட்டம் குறித்த அறிவிப்பு ஏதுவும் இடம்பெறவில்லை. ரயில்வே கட்டண குறைப்பு, தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
எனவே, தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. இருந்தபோதும், சாலை மேம்பாடு, ரயில்வே துறையில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.
ஆண்டுதோறும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவதும், நிதி ஒதுக்குவதும் சடங்காக அமைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்துத் திட்டங்களும் செயல் வடிவம் பெற்று, கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்ந்தால்தான் நிதிநிலை அறிக்கை உண்மையில் மக்களுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்கும். .
ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசே காரணம்: ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்.
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
போலீஸார் குற்றம்சாட்டுவதுபோல, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைகளில் ஒசாமா பின்லேடனின் இருந்ததாக எந்த ஊடகத்திலும் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com