விஐடி.யில் ரிவேரா கலைவிழா: சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் "ரிவேரா-17' எனும் சர்வதேச 4 நாள் கலைவிழாவை, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
வேலூர் விஐடியில் ரிவேரா-17 கலைவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரொக்கப் பரிசு வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. உடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.
வேலூர் விஐடியில் ரிவேரா-17 கலைவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரொக்கப் பரிசு வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. உடன் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் "ரிவேரா-17' எனும் சர்வதேச 4 நாள் கலைவிழாவை, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வியாழக்
கிழமை தொடங்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை நடைபெற்ற 9.9 கி.மீ. தொலைவு மாரத்தான் ஓட்டப் போட்டியை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விஐடி வளாகத்தில் வண்ணப் பலூன்கள் பறக்க விட்டு சர்வதேச கலைவிழாவைத் தொடங்கி வைத்தும், மாரத்தான் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கியும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியதாவது:
விஐடி பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகள் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளன.
பள்ளிப் படிப்பை உண்டு உறைவிடப் பள்ளியில் படித்ததால், இதுபோன்ற கல்வி நிலையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றதும், அதில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றதும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்றார்.
விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிவேரா மாணவர் குழு அமைப்பாளர் ராஷி ஸ்ரீவத்சவா வரவேற்றார்.
உள்நாடு மட்டுமல்லாது, தெற்காசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வியாழக்கிழமை இரவு சினிமா பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அர்மான் மாலிக் குழுவினரின் பிரிஸ்க் பேக்டர் நிகழ்ச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான நடனப் போட்டியும், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பறைசாற்றும் ஐக்கியா நிகழ்வை விஐடி மாணவர்கள் நடத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com