புற்றுநோயை ஏற்படுத்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்
புற்றுநோயை ஏற்படுத்தும் வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் உள்ளிட்டோர், கோக், பெப்சி பான பாட்டில்களை உடைத்து கடைகளில் விற்க வேண்டாம் என பிரசாரம் செய்தனர்.

கடைகளில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்த வெள்ளையன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நம் நாட்டில் உற்பத்திக்கும், விற்பனைக்கும் அன்னிய நாடுகளை அனுமதித்ததால், நம்முடைய சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு அமேசான் நிறுவனம். மிதியடியில் தேசியக் கொடி படத்தையும், காலணியில் மகாத்மா காந்தி படத்தையும் அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். இதை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தட்டிக் கேட்கவில்லை.

கோக், பெப்சி பானங்களை தடைசெய்து அன்னிய ஆதிக்கத்தை முறியடிப்போம். இதற்காக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நீண்ட காலமாகப் போராடி வருகிறது.

இந்நிலையில், அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் கோக், பெப்சிக்கு எதிரான நிலையை எடுத்திருப்பது நல்ல அறிகுறி. அதை எழுச்சியுடன் கொண்டு செல்ல உள்ளோம். இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கோக், பெப்சியால் பற்கள், சிறுநீரகம், கணையம் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன. எனவே, நம் நாட்டு குளிர்பானங்கள், இளநீர், மோர், நன்னாரி உள்ளிட்டவற்றை மக்கள் பருக வேண்டும். இதுதொடர்பாக தெருமுனை பிரசாரம் செய்கிறோம் என்றார் வெள்ளையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com