5 மாநில தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: டி.ராஜா

உத்தரப்பிரசேதம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என இந்திய
5 மாநில தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: டி.ராஜா

கன்னியாகுமரி:  உத்தரப்பிரசேதம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலர் டி.ராஜா கூறினார்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம், கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குமரி மாவட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் இயக்கத்தின் தலைவர் ஜீவா, எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோரைத் தந்த பெருமை இம்மாவட்டத்துக்கு உண்டு.
 சென்னை கடலோரப் பகுதியில் இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் பரவிய எண்ணெய்க் கசிவால் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவை இறந்து கரை ஒதுங்குகின்றன. மீனவர்கள், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற தேசிய இடர்பாடுகளை எதிர்கொள்ள போதுமான தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து சாதகமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
 கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் காரணமாக, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் பறிபோனது. இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க கச்சத்தீவு பிரச்னையை மறுஆய்வு செய்யவேண்டும். இதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை என்றால் கச்சத்தீவை மீட்பதற்கு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
 இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்வர்களுக்கு இன்னமும் நியாயம் கிடைக்காமல் உள்ளது. போர்க் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களின் இடங்களை இன்னமும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இலங்கை பிரச்னையில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், அரசின் மெத்தனப் போக்குக்கான காரணம் குறித்தும் நான் மக்களவையில் பேசியுள்ளேன்.
 பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதுதான் மற்ற கட்சிகளின் கருத்தாகவும் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com