ஆன்மிகவாதி என்பதில் பெருமை அடைகிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

நான் நடிகராக அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 'தெய்வீகக் காதல்' நூலை வெளியிடும் (இடமிருந்து) யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி,
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 'தெய்வீகக் காதல்' நூலை வெளியிடும் (இடமிருந்து) யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி,

நான் நடிகராக அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
"யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா' சார்பில் பரமஹம்ஸ யோகானந்தரின் "பட்ங் ஈண்ஸ்ண்ய்ங் தர்ம்ஹய்ஸ்ரீங்'- எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான "தெய்வீகக் காதல்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நூலை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் "பவரை' (இறை சக்தியை) கொஞ்சம் விரும்புபவன். நீங்கள் நினைக்கும் "பவர்' (அரசியல் அதிகாரம்) அல்ல. நான் நடிகர் என்று அறியப்படுவதைவிட, ஆன்மிகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆன்மிகம்தான் வேண்டும்: பெயர், பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டுமென்று என்னிடம் கேட்டால், ஆன்மிகம்தான் வேண்டுமென்பேன். மனித ஜென்மம் கிடைப்பதே அரிது.
என்னுடைய முதல் குரு, எனது அண்ணன் சத்திய நாராயணா. முதல் ஆன்மிக குரு சச்சிதானந்தர். அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன். ராகவேந்திரரிடம் பக்தியை கற்றுக்கொண்டேன். நான் யார் என்று எனக்குள் கேள்வி கேட்பதை ரமண மகரிஷி மூலம் கற்றுக்கொண்டேன். பரமஹம்ச யோகானந்தரின் சுய சரிதைப் புத்தகம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் குழப்பவாதி இல்லை. எனது ஆன்மிகத் தேடல் தொடந்து கொண்டே உள்ளது.
இமயமலையில் ஏராளமான ஆன்மிக ரகசியங்கள் உள்ளன என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
விழாவில், யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்வாமி ஸ்மரணானந்தா, பொருளார் ஸ்வாமி சுத்தானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அர்ஜுனனைப் போல் இருங்கள்
பீஷ்மர் ஒருநாள் கிருஷ்ணனிடம், "கண்ணா! மனிதன் ஏன் பிறந்தான், வாழ்க்கையில் நல்லவை எவை? கெட்டவை எவை? போன்றவைகளை அர்ஜுனனுக்கு மட்டும் கற்றுக்கொடுக்காதே; துரியோதனனுக்கும் அவற்றை எல்லாம் கற்றுக் கொடு' என்றாராம். அவரும் (கண்ணன்) துரியோதனனிடம் சென்று, "வா... வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதை கற்றுத் தருகிறேன்' என்றாராம். அதற்கு துரியோதனன், "கண்ணா, நான் வாழ்க்கையின் நல்லவை, கெட்டவைகளை நன்கு அறிவேன். அர்ஜுனனுக்குத்தான் இதுகுறித்து ஒன்றும் தெரியாது. எனவே, இதையெல்லாம் அவனுக்கே (அர்ஜுனன்) கற்றுக் கொடு' என்றாராம்.
இதையடுத்து, வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தையும் பகவத் கீதை மூலம் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் எடுத்துரைத்தார். நாம் துரியோதனனைப் போல் இருக்காமல், அர்ஜுனனைப் போல் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியதும் கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com